வௌ்ளை வேன் தொடர்பான ஊடக சந்திப்புடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் இருவரும் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு கடவுச்சீட்டினை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.