தேசிய மக்கள் சக்தியின் எம்.பியும் ஜே.வி.பியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, சபையில் இன்று (28) எழுப்பிய கேள்விக்கு, ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் பதிலளிக்கமுடியாது தடுமாறினர்.
நாட்டின் இராஜதந்திர பாதுகாப்பு அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ,அவருடைய பெயரும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது.
எனினும், பாதுகாப்பு அமைச்சர் யார்? அவருடைய பெயர், வர்த்தமானி அறிவித்தலில் ஏன்? வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
அப்போது, சபையில் இருந்த ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எவருமே பதிலளிக்கவில்லை. அனைவரும் அமைதியாகவே இருந்துவிட்டனர்.