தனியார் பஸ்களுக்கு தேவையான எரிபொருள்களை முன்கூட்டியே நிரப்பிக்கொள்ளாது, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று, எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் பஸ்ஸை நிறுத்தி, எரிபொருள் நிரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலேயே இந்த சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனவும் அவ்வாறான தனியார் பஸ் சேவையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்களுக்கு நாளாந்தம் தேவைப்படும் எரிபொருளை, முன்கூட்டியே பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். அது பணியாளர்களின் பொறுப்பாகும். அவ்வாறு இல்லாமல், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு பயணிகளுடன் பஸ்களை செலுத்திச் செல்வது அபாயகரமானது. ஆபத்தானது என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.