ஆண் போன்று வேடமிட்டிருந்த இளம் பெண்ணொருவர், தன்னுடைய தோழியான மற்றுமொரு பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த சம்பவம் தெற்கில் இடம்பெற்றுள்ளது.
அவ்விருவருக்கும் இடையில் மலர்ந்த காதல், இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்துள்ளது. இருவருக்கும் இடையில் வித்தியாசமான புணர்ச்சியும் இருந்துள்ளது.
எனினும், தன்னுடைய மகளுக்கு வந்த குறுந்தகவல்கள் தொடர்பில், யுவதியின் தந்தை தேடிப்பார்த்ததை அடுத்தே, இருவரும் பெண்கள் என்றும் இருவருக்கும் இடையில் முறைக்கேடான உறவு இருந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டில் அனைவரும் இருக்கும் போது, ஆண் வேடமணிந்த அப்பெண் வீட்டுக்கு வந்துள்ளார். விரைந்து செயற்பட்ட குடும்பத்தினர். அப்பெண்ணை, கையும் மெய்யுமாக பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தெற்கில், ஹக்மீமன பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இவ்விருவரும் முறைகேடாக நடந்துகொண்டமை தொடர்பில், பெற்றோர், இதற்கு முன்னர், அவ்வப்போது எச்சரித்துள்ளனர்.
ஆண் வேடமிட்டிருந்த பெண்ணுக்கு 17 வயது என்றும் மற்றைய யுவதிக்கு 19 வயது என்றும் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த இரண்டு பெண்களும் தெய்யந்தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஹக்மீமன பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.