அவுஸ்திரேலியாவில் இருந்து நாட்டுக்கு திரும்பி, வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 80 வயதான ஆச்சி, வைத்தியசாலையிலிருந்து தப்பியோடி விட்டார்.
கேகாலையை சேர்ந்த 80 வயதான ஆச்சியே இவ்வாறு தப்பியோடிவிட்டார்.
அந்த ஆச்சி அளுத்கம பிரதேசத்திலுள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தமையால், அந்த ஆச்சியை ஹோட்டல் நிர்வாகம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தது.
அங்கிருந்தே அவர் தப்பியோடியுள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி்.ஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்றுக்கான எவ்விதமான அறிகுறிகளும் தென்பட்டிருக்கவில்லை என அறியமுடிகின்றது.
எனினும், தப்பி சென்ற ஆச்சியை தேடி பல வகைகளிலும் வலை விரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.