கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு பொத்துவில் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு வீடுகளுக்கு திரும்பிகொண்டிருந்த ஜீப் விபத்துக்கு உள்ளானதில் 17 மாணவர்கள் காயமடைந்தனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு திரும்பி கொண்டிருந்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஜீப் வண்டியில் பின்னால் பொருத்தப்பட்டிருக்கும் கம்பிகளை பிடித்து கொண்டு அம்மாணவர்கள் பயணித்துள்ளனர். அக்கம்பிகள் ஒரே நேரத்தில் கழன்றமையால் இவ்விபத்துக்கு சம்பவித்துள்ளது என பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஐந்து மாணவர்கள் மட்டுமே, தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். ஏனையோர், சிகிச்சைகளை முடித்துகொண்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து ஜீப் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடிவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.