அனைத்துலக காணாமல் ஆககப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாளை ஈழத்தில் இடம்பெறவுள்ள காணாமல் ஆககப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இன்று மாலை மூன்று மணிக்கு ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மேற்படி போராட்டம் இடம்பெற்றது.
இதில் உணர்வாளர்கள் பலர் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிராக தமது கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.