வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று (30) மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு இன்று (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு இன்று (30) பிரதானமாக வடக்கில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட செயலகம் வரையும், மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் காலை 10 மணி முதல் கவனயீர்ப்பு போராட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
இதில் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளிக்க முன்வந்துள்ளமையால், வடக்கு, கிழக்கு ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுமென அறிவுறுத்தப்பட்டது.