ஶ்ரீலங்கா கொமியூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அது குறித்து அவர் அறிவித்த பின்னர் இந்த தீர் மானத்தை எடுத்துள்ளார்.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா கொமியுனிஸ்ட் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு விசேட வைத்திய நிபுணர் ஜி.வீரசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
கட்சியின் செயற்குழு அந்த பிரேரணையை ஏகமனதாக அங்கீகரித்துள்ளதாக கட்சி விடுத்துள்ள அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம ஶ்ரீலங்கா கொமியூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவமான பிரதம செயலாளர் பதவிக்கு விசேட வைத்திய நிபுணர் ஜி.வீரசிங்க இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.