சொக்கா மல்லி என்றழைக்கப்படும் பிரேமலால் ஜயசேர, எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்துகொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
அவரை, பாராளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு பணித்துள்ளார்.
எனினும், அவரால், பாராளுமன்றத்துக்கு வந்து எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்வதற்கோ, வாக்களிப்பதற்கோ தகுதியில்லை என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்றத்துக்கு வருகைதருவதா? இல்லையா? என்பது தொடர்பில், சட்டமா அதிபரால் தீரமானிக்க முடியாது. அதனை, சபாநாயகருக்கும் பாராளுமன்றமுமே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இதனால், சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் அரசியல் பணிப்போர் நிலவுகிறது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்தன.