ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னரும் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் முதன்முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி செய்தி வௌியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
“லங்கன் நியூஸ்“ வெப் என்ற இணையத்தின் செய்தி ஆசிரியர் சத்துரங்க டி.அல்விஸ் என்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிஐடியினரால் இவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைக்களுக்குப் பின்னர், நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.