ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவ நெருக்கடிக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், தங்களுக்கு தலைமைத்துவத்தை தருமாறு, ருவன் விஜயவர்தனவும் அர்ஜுன ரணதுங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதி்ல், ருவன் விஜயவர்தனவுக்கு தலைமைத்துவ பதவியை வழங்குவீர்களில் எனின், தேசியப் பட்டியலின் ஊடாக, தன்னை பாராளுமன்றத்துக்கு நியமிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதுதொடர்பில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 19 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்திய அகில விராஜ் காரியவசமும் தலைமைத்துவ பதவிக்கு போட்டியிட்டார். அவர், அந்த போட்டியிலிருந்து விலகிவிட்டார்.
எனினும், தனக்கே அந்த தேசியப்பட்டியல் வேண்டும் என்றும் தன்னுடைய அனுமதியில்லாமல் தேசியப்பட்டியல் நியமனத்தை வழங்கவேண்டாம் என்றும் அகில விராஜ் காரியவசம், ரணிலுக்கு அறிவுறுத்தியுள்ளார் என அறியமுடிகிறது.