கொரோனா வைரஸை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு முன்பு ஊரடங்கைத் தளர்வுபடுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசுஸ், கட்டுபாடுகளால் பலர் சோர்வடைந்து வருவதாகவும், எட்டு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் கூறுகிறார்.
அதேசமயம் பொருளாதாரம் மற்றும் சமூக நிலையை சரிசெய்யும் முயற்சிக்கு உலக சுகாதார அமைப்பு முழு ஒத்துழைப்புத் தருவதாக அவர் ஒரு செய்தி மாநாட்டில் கூறியுள்ளார்.
மேலும் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதையும், மக்கள் பணிகளுக்கு திரும்புவதையும், அதேநேரத்தில் பாதுகாப்பாக இருப்பதையும் தாங்கள் காணவிரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொற்றுநோய் மறைந்துவிட்டதாக எந்த நாடும் கூறிவிடமுடியாது. இந்த வைரஸ் எளிதில் பரவுகிறது.
இந்த நேரத்தில் கட்டுப்பாடுகளை தளர்வுபடுத்துவது பேரழிவுக்கான வழியைத் திறப்பது போன்றது. அரங்கங்கள், இரவு விடுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேருவதால் வைரஸ் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என்று டெட்ராஸ் கூறியுள்ளார்.