நாட்டின் ஆட்சி நிர்வாகத்துக்குள் இணையும் நபர், அந்த நாட்டில் மட்டுமே பிரஜாவுரிமையை கொண்டவராக இருத்தல் வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாட்டின் நிர்வாகத்துக்குள் இணைய வேண்டுமாயின், மற்றைய நாட்டு பிரஜாவுரிமையை கைவிடுவது உசித்தமானது என்றும் அமைச்சர் விமல் தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு முன்னர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டு, இந்நாட்டின் பிரஜாவுரிமையை மட்டுமே பெற்றுக்கொண்டிருந்தார்.
பசில் ராஜபக்ஷவுக்கும் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு தேவையாயின், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவைப் போல, அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டு, வரவேண்டும் என்றார்.
எனினும், 19ஆவது திருத்தத்தில் உள்ளதைப்போல, இரண்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்காக கால்கட்டை அவிழ்த்துவிட்டு, அவ்வாறானவர்களை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தல், அவ்வளவுக்கு நல்லதல்ல என்றார்.