கண்டி-திகனை பகுதியில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற குழப்பகரமான நிலைமைகளுக்கு பிரதான காரண கருத்தா என கருதப்பட்ட “மகாசோன்” பலகாய, மீண்டும் களத்தில் குதித்துள்ளது.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் “மகாசோன்” பலகாய, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டது.
அந்த அணிக்கு, ஒரு ஆசனமும் கிடைக்கவில்லை. இதனால், வாக்குகளை மீள எண்ணுமாறு, கண்டி மாவட்டத்தில் ஆங்காங்கே கையொப்பங்களை திரட்டியது.
இந்நிலையில், கண்டி மாவட்ட வாக்குகளை மீளவும் எண்ணுமாறு உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
கண்டியில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மகாசோன் இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்கவிற்கு கண்டி – மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.