ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டவர்கள் அக்கட்சியிலிருந்து பிரிந்து செல்வதற்கு முயல்கின்றனர் என தெரியவருகிறது.
அவ்வாறானவர்கள், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது
கட்சியிலிருந்து விலகி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கியதன் பின்னரே, அவர்கள் அரசாங்கத்துடன் இணைய உள்ளனர் என அந்த தகவல்கள் தெரிவித்தன.