ஒரு வருடத்தில் மட்டும் 9,000 முதல் 10, 000 வரையான சிறுவர் துஸ்பிரயோகங்கள்,சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில்,முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது கேட்டிருந்த கேள்விக்கு அளித்துள்ள பதிலில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், 2015 ஆம் ஆண்டு 1,539 சிறுவர் துஸ்பிரயோகங்கள்,9,193 சிறுவர் துன்புறுத்தல்கள்,2016ஆம் ஆண்டு 1,275 சிறுவர் துஸ்பிரயோகங்கள்,8,086 சிறுவர் துன்புறுத்தல்கள்,2017 ஆம் ஆண்டு 1,175 சிறுவர் துஸ்பிரயோகங்கள்,7,839 சிறுவர் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.