இலங்கையில் வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கு பொருத்தமற்ற நபர்களை அரசாங்கம் இதுவரை நியமித்துள்ளது என்று புனித முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நாரஹன்பிடயில் அமைந்துள்ள அபயராம விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்களில் சிலர் தேவையான காலங்களில் காணப்படவில்லை.
இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அவர்கள் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட வேண்டும். பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மக்கள் கருத்தை கேட்பதில்லை.
எனவே, தலைவர்களின் புகழைப் பாடத் தயாராக இல்லை. குறைகளை பொதுவில் சுட்டிக்காட்டுவதற்கு முன்வருவேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான இருந்து ஆதரவளித்த தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.