web log free
January 01, 2025

வீரசேகரவுக்கு எதிராக மொட்டு அதிரடி தீர்மானம்

இலங்கை மாகாணசபை உறுப்பினர்களின் ஒன்றியம் மாகாண சபைத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் காஞ்சனா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் காஞ்சனா ஜெயரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர கூறியமைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிக்கை அவரது தனிப்பட்ட அறிக்கையாகும். அரசாங்கத்தின் கொள்கை அல்ல.

அந்தவகையில் அமைச்சர் சரத் வீரசேகர அறிக்கை குறித்து  எங்களது அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தம்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஏராளமான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2Shares
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd