பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
அந்த 20ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. அதில் இரட்டை பிரஜாவுரிமையை நீக்கும் யோசனை அடங்கியுள்ளது. அதற்கே, சுதந்திரக் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ, இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர்கள், பாராளுமன்றத்துக்கு நுழைவதை நாடுகள் பல இல்லாமல் செய்துள்ளன. ஆகையால், இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கு இணங்க முடியாது என்றார்.
இதுதொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு ஆராயவிருக்கின்றது என்றார்.