அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலமளிப்பதற்காக நேற்று முற்பகல் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியிருந்தார்.
இதேவேளை, இன்று முற்பகல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், 6 மணித்தியாலங்களாக வாக்குமூலம் வழங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.