கிழக்கு கடற்பரப்பில் தீ பற்றி எறிந்த நியூ டயமண்ட் கப்பல் குறித்து விசாரணை செய்ய பிரித்தானிய மற்றும் நெதர்லாந்து குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறது.
10 பேர் கொண்ட குழு விஷேட படகுகள் மூலம் சம்பவம் இடம்பெற்றுள்ள பகுதிக்கு சென்று ஆய்வுகளையும் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ள இக்குழுவில், நட்டங்களை கணிக்கும் விஷேட நிபுணர்கள், இடர்களின் போது மீட்புக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.