எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் 9 பேர், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு ஆதரவளிக்கவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளுடன் அவர்கள், தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறு எனினும், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியூதீன் ஆகியோரையும் அவர்களின் கட்சிகளைச் சேர்ந்தோர்களையும் அரசாங்கத்துக்குள் இணைத்துகொள்வது இல்லை என்ற கடுமையான முடிவில் அரசாங்கம் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.