நுவரெலியா நகரிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையத்தை நீக்குமாறு பிரதேச மக்கள் சுகாதார பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
டுபாயில் நாட்டில் பணியாற்றிய 389 பேர் கடந்த 31ஆம் திகதியும் இலங்கை வந்த நிலையில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் அங்கொடையில் உள்ள IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மக்கள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா சுற்றுலா ஹோட்டலில் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து ஒருவரும் வெளியே செல்வதற்கு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் அந்த ஹோட்டல்களை சுற்றி இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் வைத்தியர்கள் மற்றும் இலங்கை இராணுவ வைத்தி படையணியின் வைத்தியர்களினால் அந்த சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஈடுபட்டுள்ளவர்கள் தினமும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.
அந்த சுற்றுலா ஹோட்டல்களில் சேவை செய்யும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஹோட்டல்களுக்கு வெளியே வருவதாகவும், அவர்கள் நுவரெலியா நகரத்திலும் சுற்றியுள்ள வீடுகளிலும் தங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.