அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியால் தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்படுவதை விடவும் அதற்கான அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு வழங்குவது உசித்தமானது என, ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட இவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பல்வேறு மட்டங்களில் குரல் கொடுத்துவந்தவர்.