முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களையும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி குறித்த அனைவரையும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.