web log free
January 01, 2025

1379 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது ( வீடியோ)

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (07) மாலை மன்னார் சாந்திபுரம் பிரதான வீதியில் வைத்து ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளுடன் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஸாந்தன் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் குறித்த மஞ்சள் கட்டிகளை மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு நீர்கொழும்பு பிரதேசத்திற்கு வாகன மொன்றில் கடத்தி செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மன்னார் சாந்திபுரன் பகுதியில் வைத்து சந்தேகத்திற்கு இடமான குறித்த வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் உப்பு பக்கட்டுக்களுக்கு மத்தியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டிகள் 1379 கிலோ 960 கிராம் என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மன்னார் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய சந்தே நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் கைப்பற்றப்பட்ட 1379 கிலோகிராம் மஞ்சள்

மன்னாரில் கைப்பற்றப்பட்ட 1379 கிலோகிராம் மஞ்சள்

Posted by செய்தி.lk on Monday, September 7, 2020
Last modified on Tuesday, 08 September 2020 05:30
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd