கொழும்பு – முகத்துவாரத்தில் 18,900 போதைவில்லைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைவில்லைகளுடன் லொறியில் பயணித்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 4 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.