எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை அக்கட்சி அறிவிக்கவுள்ளது.
இத்தகவலை ஐக்கிய தேசிய கட்சியின் சட்டச் செயலாளர் நிஷ்ஷங்க நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் வாரமும் கட்சியின் செயற்குழு சந்திப்பு இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.