மரண தண்டனை கைதியான பிரேமலால் ஜயசேகர, எம்.பியாக நேற்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் கறுப்பு பட்டி அணிந்து, எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், எதிர்க்கட்சியிலிருந்து ஒன்பது பேர், ஆளும் கட்சியுடன் இணையவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர் என அந்த தகவல்கள் தெரிவித்தன.
அவ்வாறானவர்கள் தொடர்பில் புதிய தகவல் கசிந்துள்ளது.
அதாவது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டும், கறுப்பு பட்டி அணியாதவர்களில் சிலரே, எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்.
அவ்வாறான சிலர் இந்த படத்தில் உள்ளனர். அத்துடன், கட்சி தாவவுள்ள இன்னும் சிலரை படத்தில் காண முடியவில்லை.