பண்டாரகம, அட்டுலுகம, மாராவ பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஜீப் வண்டியை வழிமறித்து பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.