தீ விபத்துக்கு உள்ளான MT New Diamond எண்ணெய்க் கப்பலின் மீட்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூவர் கப்பலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தீ விபத்துக்கு உள்ளான MT New Diamond எண்ணெய்க் கப்பல் காணப்படும் இடத்தில் எண்ணெய்ப் படிவுகளை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இரண்டு கடல்மைல் தொலைவுக்கு குறித்த எண்ணெய்ப் படிவுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கப்பலைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் நேற்றைய தினம் டீசல் படிவுகளை அவதானிக்க முடிந்ததாகவும், கடல் பிரதேசத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், இரசாயனங்களை தூவ நடவடிக்கை எடுத்ததாகவும், கடற்படை குறிப்பிட்டுள்ளது.