வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென, ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று (09) இடம்பெற்ற உற்பத்தி வரிகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஒரு நேர்காணலில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன், மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென கூறியுள்ளார். அவர் மகாவம்சத்தை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையான என்பது எமக்கு முக்கியமில்லை. ஆனால், வடக்கில் புத்தர் சிலைகளை வைக்க வேண்டாமென கூறுவதற்கு அவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்தார்.