உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்றையதினம் சாட்சியமளித்தார்.
அவர் சாட்சியமளிக்கும் போது, அந்த சாட்சியத்தை ஜயமயத்துல் உலமா அமைப்பின் பதில் செயலாளர் சட்டவிரோதமான முறையில் ஒலிப்பதிவு செய்துள்ளார்.
அதனை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு இன்றையதினம் கண்டுப்பிடித்து, அந்த ஒலிப்பதிவை கைப்பற்றியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறு ஒலிப்பதிவு செய்தார் என்பது தொடர்பில், செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள ஊடகங்களில் குறிப்பிடப்படவில்லை.