பாராளுமன்றத்துக்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதுதொடர்பில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சபைக்கு இன்று (11) அறிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஒரு தற்காலிக நடவடிக்கையாக பொதுமக்கள் இனி பாராளுமன்றத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன அறிவித்தார்.
அதன்படி பாராளுமன்ற கலரிகள் தற்காலிகமாக பொதுமக்களுக்கு மூடப்படும்.