எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, செல்வராஜா யோகச்சந்திரன் (குட்டிமணி) நடந்த அநியாயத்துக்காக, பாராளுமன்றத்தில் தற்போது குரல் கொடுத்து கொண்டிருக்கின்றார்.
குட்டிமணி என்றழைக்கப்பம் செல்வராஜா யோகச்சந்திரன், என்பவர் பாராளுமன்றத்துக்கு 1972ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்டார். வர்த்தமானி அறிவித்தலிலும் அவருடைய பெயர் வந்துள்ளது.
டெலோ இயக்கத்தின் தலைவரா அவர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனைக்கு எதிராக அவர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்திருந்தார்.
எனினும், அன்றிருந்த பாக்கீர் மாக்கர், குட்டிமணியை நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கு அனுமதியளிக்கவில்லை
யார் இந்த குட்டிமணி, என்ன சொன்னார், எவ்வாறு கொல்லப்பட்டார்.
”சுதந்திரத் தமிழீழத்தை என் கண்கள் காணவேண்டும் அதனால் இறந்தபின் என் கண்களை தானம் செய்துவிடுங்கள்“ என்று தன் இறுதி ஆசையை நீதிமன்றத்தில் சொன்னதற்காய் ஜூலை-25 அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து ”குட்டிமணியின்“ கண்கள் உயிருடனிருக்கும்போதே சிங்களக்காடையர்களால் பிடிங்கி புத்தனின் காலடியில் போடப்பட்டது.
குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்.
யோகச்சந்திரன் வல்வெட்டித்துறையில் செல்வராஜா – அன்னமயில் ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.