வரவு - செலவு திட்டத்துக்கு முன் அமைச்சரவை மறுசீரமைப்பு செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகளுக்கும் அமைச்சரவை பதவிகளை வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசு தரப்பு திட்டமிட்டு வருகிறது.
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆகக் கட்டுப்படுத்தும் பிரிவு 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ரத்து செய்யப்படும்.
அதன்படி, ஜனாதிபதியின் விருப்பப்படி அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.