தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
யாழ் பொலிஸாரால் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதவான் இந்த உத்தவையிட்டார்.
யாழ் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள், சிவாஜிலிங்கம், யாழ் மாநகரசபை மேயர் ஆனல்ட் உள்ளிட்ட 16 பேர் நினைவேந்தலை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.