web log free
February 08, 2026

சர்வதேச மன்னிப்பு சபை எதிர்ப்பு

இலங்கையில் மரண தண்டனை மீண்டும் அமுலாக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுசெயலாளர் குமி நைடோ, இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை அமுலாக்கப்படும் என்று ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார்.

இந்த நிலையில், குறித்த தீர்மானத்துக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை, இணையத்தளம் ஊடாக கையெழுத்து சேகரிக்கு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd