நான் சைவத் தமிழர் பற்றி குறிப்பிட வேண்டி வந்தது ஆதித் தமிழர் பற்றி பேசுகையிலேயே! கிறிஸ்துவுக்கு முன்னிருந்து தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.
இலங்கையில் அக்கால கட்டத்தில் இருந்த ஒரே சமயம் சைவமே. இலங்கையைப் பாதுகாக்கும் ஐந்து ஈஸ்வரங்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் இங்கு இருந்து வருகின்றன. அவை கீரிமலையில் நகுலேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், சிலாபத்தில் முன்னேஸ்வரம் மற்றும் தெற்கில் மாத்தறையில் தொண்டேஸ்வரம் ஆவன. தொண்டேஸ்வரம் இருந்த இடத்தில் தான் தற்போது தென்துறை (Dondura தேனாவரம்) விஷ்ணு கோயில் இருக்கின்றது.
ஆதி சைவத்தமிழர் இந்த நாட்டில் வாழ்ந்த காலத்தில் (பௌத்தம் வரமுன்பு) பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் எதுவும் இருக்கவில்லை. சிங்களமொழி பேசுவோர் இருக்கவில்லை. இந்த நாட்டின் ஆதிக்குடிகள் சைவத்தமிழரே என்ற சரித்திர உண்மையைத்தான் நான் கூறியுள்ளேன்.
இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,