ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மைத்துனருமான ருவன் விஜேவர்தன தெரிவாகியமைக்கு அக்கட்சியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சியும் குடும்ப சொத்தாக பயன்படுத்தப்படுமாயின் கட்சியில் இருந்து விலகியிருப்பது தனக்கு நலமாக இருக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.