web log free
January 04, 2025

கழுத்தை அறுப்பதாக கூறியவருக்கு ஹட்டனில் வழக்கு

இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

ஹட்டன் கொமர்ஷல் பிரதேசத்தில் தனியார் காணியை உரிமையாளரின் அனுமதியின்றி தனிமைப்படுத்தும் முகாமாக இராணுவம் பாவித்தமைக்கு எதிராக இந்த வழக்கு இடப்பட்டுள்ளது.

வழக்கு மீதான விசாரணை ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்திரேட் நீதவான் ட்ரோக்ஸி முன்பான இன்று நடந்தது.

இராணுவம் தரப்பில் அஜராகிய இராணுவத்தின் சட்டப்பிரிவு சட்டத்தரணி மற்றும் அரச சட்டத்தரணி ஜயகித் மாதுரத்ன ஆகியோர், இராணுவத்திற்கு எதிரான வழக்கினை விசாரிக்க மேற்படி இந்த நீதிமன்றத்திற்கு கிடையாது என்று வாதிட்டனர்.

தனியார் காணி உரிமையாளர் சார்பாக சட்டத்தரணி மைத்ரி குணரத்ன பிரசன்னமாகினார்.

எதிர்தரப்பு வாதத்தை கவனதிற்கொண்ட நீதிமன்றம், அடசேபனையை எழுத்து வடிவில் வருகிற 29ம் திகதி சனர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட அதேவேளை, வழக்கினை அன்றைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd