புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து புதுக்குடியிருப்பு, உயிலன்குளம் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 52 கிலோ கேரள கஞ்சா மற்றும் 920 கிலோ மஞ்சள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், 5 கோடி ரூபா பணம், லொறி மற்றும் டிரக்டர் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.