web log free
January 04, 2025

பாடசாலை மாணவி கடத்தப்பட்டார் !

கண்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவி இன்று (15) காலை கடத்தப்பட்டார்.

அவரை கடத்திச் சென்ற இனம்தெரியாத குழுவினர் சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் கண்டியிலுள்ள இன்னொரு பாடசாலையின் முன்பாக அவரை இறக்கி விட்டுள்ளனர்.

பஹிரவகந்தவைச் சேர்ந்த 12 வயது மாணவி காலை 06.45 மணியளவில் தனது வீட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு முகக்கவசத்தை பெற சென்றார்.

இதன்போது வாகனத்தில் வந்த இனம்தெரியாத குழுவொன்று சிறுமியை கடத்தி சென்றது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டனர்.

விசாரணைகளை நடத்த வீட்டிற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழந்தையின் மொபைல் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தனர்.

தொலைபேசி தரவுகளின் அப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கண்டியில் பல இடங்களுக்கு இடையில் சிறுமி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

காலை 09.45 மணியளவில் கண்டியில் உள்ள மற்றொரு முக்கிய பாடசாலையின் நுழைவாயிலில் சிறுமி கைவிடப்பட்டார்.

இந்த கடத்தல் தொடர்பாக சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

Last modified on Tuesday, 15 September 2020 10:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd