ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீனிடம் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினமும் ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய இன்று முற்பகல் ஆணைக்குழுவில் அவர் ஆஜராகியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஸாட்டிடம் நேற்றும் அதேபோல நேற்று முன்தினமும் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.