ஜப்பானின் புதிய பிரதமராகயோஷிஹிடே சூகா தெரிவாகியுள்ளார்.
சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து சின்ஷோ அபே அண்மையில் விலகியிருந்தார்.
இதனையடுத்து ஜப்பான் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்ற யோஷிஹிடே சூகா, தற்போது அடுத்த பிரதமராக தெரிவாகியிருக்கின்றார்.
77 வயதுடைய இவர், முன்னாள் பிரதமர் அபேயின் நெருக்கமானவருமாவார்.
ஜப்பானின் அக்கிடா மாநிலத்தைச் சேர்ந்த இவர், விவசாயின் மகனாவார்.