நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 23 வயது இளைஞரை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மகாவலி கங்கையின் கிளை நதியான ஹட்டன் ஓயாவில் அபோஸ்லி தோட்டத்திற்கு குறுக்கே ஓடும் நீர்வீழ்ச்சியொன்றில் குதித்தே இவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது, ஹட்டன் பொலிஸாருக்கு நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த இளைஞரை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் 23 வயதுடைய மேற்படி இளைஞன் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.