குழந்தைகள் என்றாலே எப்படிப்பட்டவர்களையும் தங்களிடம் ஈர்த்துவிடுவார்கள். தனது குடும்பத்தை ஒரு குட்டிக்குழந்தை ப்ராங்க் செய்த பழைய வீடியோ ஒன்று, தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
‘பேக் டு நேச்சர்’ என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ பலரையும் கவர்ந்திருக்கிறது. 16 நொடிகள் மட்டுமே வரும் இந்த வீடியோவில், திறந்து வைக்கப்பட்டிருக்கும் பெரிய தண்ணீர் கேன் ஒன்றில் குழந்தை கையை விட்டுக்கொண்டு, மாட்டிக்கொண்டதைப் போல் பாவனை செய்கிறது.
நெட்டிசன்கள் பலரும் தங்கள் மனதைக் கவர்ந்த குழந்தைகள் குறித்து பல கருத்துகளையும் ட்வீட் செய்துவருகின்றனர்.
Oh no, I’m stuck, Ha, Gotcha pic.twitter.com/9XVqEOvy9x
— Back To Nature (@backt0nature) September 15, 2020