ஒவ்வொரு வருடத்திலும் கொழும்பிலுள்ள பிரதான தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் நடத்தப்படுகின்ற போதிலும் கடந்த வருடத்தில் மாத்திரம் நடத்தாமலிருந்த மர்மம் என்ன என்பது குறித்து விசாரணை அவசியம் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று மாலை ஆஜராகி சாட்சியமளித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
ஆணைக்குழுவில் ஆஜராகிய பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஈஸ்டர் தினத்தில் தீவிரவாத தாக்குதல்கள் பற்றி கொழும்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்திருக்கலாம். பிரதமர், ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமருக்குக்கூட இந்த தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. விமல் வீரவன்சவும் அதற்கான சான்றினைக் காண்பித்து பலதடவை பேசியிருக்கின்றார்” என்றும் ஹரின் பெர்ணான்டோ கூறினார்.