பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாலித்த ரங்கே பண்டார ஆகிய இருவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு, ஆளும் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக முக்கியமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்திலேயே மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் 52 நாட்களாக இடம்பெற்ற போலி அரசாங்கத்தின் போது, பாலித்த ரங்கே பண்டாரவினால் முன்னெடுக்கப்பட்ட சேவையும் இதன் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக, தேசிய அரசாங்கமொன்றை அமைத்து, மேலே குறிப்பிட்ட இவ்விருவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறும் இந்தக் கூட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.